காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் இரண்டாவது அரசு கல்லூரி, உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி தமிழக அரசாணை எண்.162-ன் படி (2013-14) ஆம் கல்வி ஆண்டில் 13.09.2013 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரி தமிழக அரசாணை எண் 266 நாள் 19.09.2017-ன் படி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டு இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் பட்ட வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசாணை எண். 120 நாள் : 22.06.2018-ன் படி (2018-19) ஆம் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரியில் இளம் அறிவியல் பிரிவில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப் பிரிவுகள் புதிதாக துவங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் திருப்புலிவனத்தில் அமைந்துள்ள இக்கல்லூரி, உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்க்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.